தொழில்நுட்பம்
ஹானர் 20ஐ

இந்தியாவில் ஹானர் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

Published On 2019-11-22 05:02 GMT   |   Update On 2019-11-22 05:02 GMT
ஹானர் பிராண்டு 20ஐ ஸ்மார்ட்போனின் விலை குறுகிய காலக்கட்டத்திற்கு குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.



ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் விலையயை குறுகிய காலத்திற்கு குறைத்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. என ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகமான ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

தற்சமயம் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் மிட்நைட் பிளாக் வேரியண்ட் விலை குறுகிய காலக்கட்டத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹானர் 20ஐ 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு நவம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் மற்ற வேரியண்ட்கள் (ஃபேண்டம் புளூ மற்றும் கிரேடியன்ட் ரெட்) விலை குறைக்கப்படவில்லை. இதனால் மிட்நைட் பிளாக் வேரியண்ட் புதிய விலை ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளத்தில் மாற்றப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் EMUI 9.0, 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

3டி லித்தோகிராஃபி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரேடியன்ட் பேக் கொண்டிருக்கும் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனில் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News