செய்திகள்
ஆர்ப்பாட்டம்

பேராவூரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2021-11-25 11:30 GMT   |   Update On 2021-11-25 11:30 GMT
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேராவூரணி:

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் வெண்ணிலா தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் ரவி, வட்டச் செயலாளர் இளையபாரதி, கோட்டச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முன்கள பணியாளர்களுக்கான சலுகைகள், செலவினங்கள் மற்றும் பணப் பயன்களை வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் 53 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அரசாணையின்படி பணி வரன்முறை செய்யப்பட்டதை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ததை கண்டித்தும், உரிய காலத்தில் நில அளவை மற்றும் நிர்வாகப்பயிற்சி அளிக்காமல், சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்காமல், போதிய கால அவகாசம் அளிக்காமலும் பல்வேறுபட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கச் சொல்லி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் அச்சுறுத்தலை கண்டித்தும்,

பலமுறை வலியுறுத்தியும் அடங்கல் வழங்குவது தொடர்பான தெளிவான சுற்றறிக்கையை, மாவட்ட நிர்வாகம் வழங்காதது, வருவாய் நிர்வாக ஆணையரின் சுற்றறிக்கையின் படி கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.

தொடர்ந்து அனைத்து விடுமுறை நாட்களிலும் பணிச்சுமையை ஏற்படுத்துவதை கண்டித்தும், மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகளை அச்சுறுத்தி பதிவுபெற்ற சங்க நிர்வாகத்தை செயல்பட விடாமல் தடுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிறைவாக கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 7 பெண்கள் உள்ளிட்ட 36 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News