உள்ளூர் செய்திகள்
.

ஒரு கிலோ தக்காளி ரூ.20 ஆக உயர்வு

Published On 2022-04-16 06:21 GMT   |   Update On 2022-04-16 06:21 GMT
சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 ஆக உயர்ந்தது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது. விளைச்சல் குறந்ததால் மார்க்கெட்டு களுக்கு தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.

சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி  5 ரூபாய்க்கு விற்பனையானது.    பின்னர்   தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்த நிலையில் தேவை அதிகரிப்பால்   இந்த விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள்  தெரிவித்தனர்.  

மற்ற காய்கறிகள் விலை  ஒரு கிலோவுக்கு விவரம் வருமாறு:-

உருளை கிழங்கு  ஒரு கிலோ  ரூ.  28, சின்ன  வெங்காயம் 18, பெரிய வெங்காயம் 20, பச்சை மிளகாய் 38, கத்திரிக்காய் 10, வெண்டைக்காய்  32, முருங்கைக்காய் 20, பீர்க்கங்காய் 32, சுரக்காய் 12, புடலங்காய் 14, பாகற்காய் 24, தேங்காய் 30, முள்ளங்கி 16, பீன்ஸ் 64, அவரை 36, கேரட் 54, மாங்காய்20, வாழைப்பழம் 20,  கீரைகள் 20, பப்பாளி 24, கொய்யா 40, மாதுளை 200, ஆப்பிள் 200, சாத்துக்குடி 90 ரூபாய்க்கும் விற்பனை
யாகிறது.

தக்காளி விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் விளைச்சல் குறைவாக உள்ளதால் வெளியிடங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவர வியாபாரிகள் திட்டமிட்-டுள்ளனர்.
Tags:    

Similar News