ஆன்மிகம்
ஜோதிடம்

பேச்சுத் திறமை பெற்ற உபய சர யோகம்

Published On 2019-08-16 08:49 GMT   |   Update On 2019-08-16 08:49 GMT
சுய ஜாதகத்தில் சுப உபய சர யோகம் அமைந்துள்ளவர்கள் வாக்கு வன்மை, பேச்சுத் திறமை, செல்வாக்கு, அந்தஸ்து, கெளரவம், பொருளாதார வளர்ச்சி ஆகிய நன்மைகளை பெற்று வாழ்வார்கள்.
சூரியனுக்கு முன் உள்ள வீடு அல்லது அடுத்து உள்ள வீடு ஆகியவற்றில் செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகியவற்றில் ஐந்து கிரகங்களில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்திருந்தால் அதற்கு உபய சர யோகம் என்று பெயர்.

அதில், சூரியனுக்கு முன்புறம் அல்லது பின்புறம் சுபக்கிரகங்களான புதன், சுக்ரன், குரு ஆகியவை அமைந்திருந்தால் அது சுப உபய சர யோகம் என்று சொல்லப்படும்.

அதேபோல சூரியனுக்கு முன்புறம் அல்லது பின்புறம் பாபக் கிரகங்களான செவ்வாய், சனி ஆகியவை அமர்ந்திருந்தால் அது பாப உபய சர யோகம் என்று சொல்லப்படும்.

சுய ஜாதகத்தில் சுப உபய சர யோகம் அமைந்துள்ளவர்கள் வாக்கு வன்மை, பேச்சுத் திறமை, செல்வாக்கு, அந்தஸ்து, கெளரவம், பொருளாதார வளர்ச்சி ஆகிய நன்மைகளை பெற்று வாழ்வார்கள். ஆனால், பாப உபய சர யோகம் கொண்டவர்கள் கடின உழைப்புக்கு பின்னரே எதையும் பெற இயலும் என்பது ஜோதிட விதியாகும்.
Tags:    

Similar News