செய்திகள்
கோப்புபடம்

உடுமலை பூமாலை வீதி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - வருகிற 27ந் தேதி நடக்கிறது

Published On 2021-10-23 07:43 GMT   |   Update On 2021-10-23 11:03 GMT
வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) திருவிளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடுகள், வேள்வி நிறைவு ஆகியவை நடக்கிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை பூமாலை வீதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் வடக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். கோவில் வளாகத்தில் விநாயகர், ராமலிங்கேஸ்வரர், வள்ளி தெய்வானையோடு முருகன், கொற்றவை, 9 கோள்கள் ஆகியோரின் சந்நிதிகளும் அமையப் பெற்றுள்ளன. 

இந்தநிலையில் கோவில் கோபுரங்கள் புதிதாக பல வர்ணம் பூசப்பட்டு, புதிதாக மண்டபம் கட்டப்பட்டு திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து 3 நாட்கள் கும்பாபிஷேக விழா நடக்கிறது.  

விழாவில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) திருவிளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடுகள், வேள்வி நிறைவு ஆகியவை நடக்கிறது. 26-ந்தேதி திருப்பள்ளியெழுச்சி, விமான கலசம் நிறுவுதல் ,  மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. 

3-ம் நாளான 27-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் விமானம் மற்றும் மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந்தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News