செய்திகள்
ப சிதம்பரம்

மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கே மூடுவிழா வரும் - ப.சிதம்பரம்

Published On 2021-09-10 20:44 GMT   |   Update On 2021-09-10 20:44 GMT
மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை:

இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத் துறைக்கே மூடுவிழா வரும். பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகின்றனர். சமையல் எரிவாயு விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை என மோடி அரசு கூறியது உண்மை அல்ல. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மோடி அரசு தவறான தகவல் தெரிவித்துள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சி தரக்கூடிய ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் இது எதிரொலிக்கும். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News