ஆட்டோமொபைல்
2021 ஜாவா பார்டி டூ

இந்தியாவில் 2021 ஜாவா பார்டி டூ வெளியானது

Published On 2021-02-12 10:03 GMT   |   Update On 2021-02-12 10:03 GMT
ஜாவா நிறுவனத்தின் 2021 பார்டி டூ மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஜாவா பார்டி டூ மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில்அறிமுகம் செய்தது. 2021 ஜாவா பார்டி டூ மாடல் விலை ரூ. 1.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் பல்வேறு புது அம்சங்கள், சிறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு மூன்று புதிய நிறங்களில் வழங்கப்படுகிறது. 

2021 ஜாவா பார்டி டூ மாடல் சிரியஸ் வைட், ஆல் ஸ்டார் பிளாக் மற்றும் ஒரியன் ரெட் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர பியூவல் டேன்க் மீது ரேசிங் ஸ்டிரைப்களுடன்  42 எண் மற்றும் கிளாசிக் லெஜண்ட்ஸ் லோகோ இடம்பெற்று இருக்கிறது. 



2021 ஜாவா பார்டி டூ மாடலில் புதிய விண்ட்ஷீல்டு, பார் எண்ட் மிரர், சவுகரியான சீட், புது வடிவமைப்பு கொண்ட ஸ்டான்டு, அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டையர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹெட்லேம்ப் கிரில், பிளை ஸ்கிரீன் உள்ளிட்டவை அக்சஸரீயாக வழங்கப்படுகிறது.

இவைதவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய மாடலிலும் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே 293சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு பிஎஸ்6 ரக யூனிட் ஆகும். இந்த என்ஜின் 26 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News