செய்திகள்
ஹர்தீப் சிங் பூரி

ஏர் இந்தியாவை விற்பது அல்லது மூடுவதை தவிர வேறு வழி இல்லை: மத்திய அமைச்சர்

Published On 2020-09-15 17:32 GMT   |   Update On 2020-09-15 17:32 GMT
கடன் சுமையால் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பது அல்லது மூடுவது என்ற இரண்டு வழிகள் மட்டுமே அரசிடம் உள்ளது என விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் விமான சீர்திருத்த மசாதாவை தாக்கல் செய்து பேசிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ‘‘சுமார் 60 ஆயிரம் கோடி கடன் உள்ள ஏர் இந்தியாவை தனியார் மயம் ஆக்குவது அல்லது மூடுவது அகிய இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன.

யாராவது வாங்கி அதை லாபகரமாக இயக்குவார்கள் என்று நம்புகிறேன். ஏர் இந்தியாவை வாங்குபவர்கள் அதற்கு இருக்கும் கடன் தொகையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என முன்னர் அறிவித்ததை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
Tags:    

Similar News