தொழில்நுட்பம்
ஐபோன் SE

ஆப்பிள் புது ஐபோன் SE மாடல் வெளியீட்டு விவரம்

Published On 2021-07-20 04:25 GMT   |   Update On 2021-07-20 04:29 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE மாடல் ஏ14 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸ் அம்சங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது புதிய ஐபோன் SE விவரங்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக புதிய ஐபோன் SE மேம்பட்ட பிராசஸர் கொண்டிருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.



இந்த நிலையில், புதிய ஐபோன் SE அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 2022 மாடலில் ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. ஐபோன் SE 2022 குறைந்த விலை 5ஜி ஐபோன் என விளம்பரப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் SE மாடலில் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, பெசல்கள், டச் ஐடி சென்சார் வழங்கப்படுகிறது.

தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் SE 2020 மாடலில் 4.7 இன்ச் IPS LCD ஸ்கிரீன், ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 1821 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 7 எம்பி செல்பி கேமரா, 12 எம்பி பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News