செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னையில் 992 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2020-09-17 16:52 GMT   |   Update On 2020-09-17 16:52 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 560 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 524 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.  23 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 36 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1,51,560 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 34
செங்கல்பட்டு - 283
சென்னை -992
கோவை - 530
கடலூர் - 206
தர்மபுரி - 124
திண்டுக்கல் - 78
ஈரோடு -98
கள்ளக்குறிச்சி - 110
காஞ்சிபுரம் - 187
கன்னியாகுமரி - 118
கரூர் - 52
கிருஷ்ணகிரி - 85
மதுரை - 78
நாகை - 72
நாமக்கல் - 112
நீலகிரி -82
பெரம்பலூர் -13
புதுக்கோட்டை - 118
ராமநாதபுரம் - 30
ராணிப்பேட்டை -97
சேலம் - 291
சிவகங்கை - 42
தென்காசி - 70
தஞ்சை - 155
தேனி - 77
திருப்பத்தூர் - 94
திருவள்ளூர் -239
திருவண்ணாமலை - 169
திருவாரூர் - 108
தூத்துக்குடி - 80
திருநெல்வேலி - 95
திருப்பூர் - 191
திருச்சி - 115
வேலூர் - 141
விழுப்புரம் - 125
விருதுநகர் - 68
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 1
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 5,560

Tags:    

Similar News