தொழில்நுட்பம்
கேலக்ஸி எஸ்20 லைட்

இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்20 லைட் விவரங்கள்

Published On 2020-07-25 04:01 GMT   |   Update On 2020-07-25 04:01 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் எடிஷன் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. தற்போதைய தகவல்களின் படி புதிய கேலக்ஸி எஸ்20 லைட் மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. 

தட்சு வலைதளத்தில் லீக் ஆகி உள்ள விவரங்களின் படி கேலக்ஸி எஸ்20 லைட் எடிஷன் EB-BG781ABY எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் 4370 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே அளவு பேட்டரி சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. 



நிறங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்20 லைட் மாடல் கிரீன், ஆரஞ்சு, ரெட் மற்றும் வைட் நிறங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே நிறங்கள் அனைத்து சந்தையிலும் விற்பனைக்கு வருமா அல்லது வேறுபடுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாக இருக்கிறது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்20 லைட் மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஐபி68 தர சான்று, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News