ஆன்மிகம்

நடராஜரை தரிசிக்கும் முறை

Published On 2018-06-21 10:03 GMT   |   Update On 2018-06-21 10:03 GMT
பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி.
நடராஜரை 2 வழிகளில் தரிசிக்க வேண்டும்.

1)மேலிருந்து கீழாக முதலில் திருமுகத்தை தரிசிக்க வேண்டும், பின்னர் அபய ஹஸ் தத்தையும் (அபயம் அளிக்கும் வலது கை) தூக்கிய திருவடியையும் மனதை ஒருமுகப் படுத்தி தரிசிக்க வேண்டும்.

2) கீழிருந்து மேலாக முதலில் தூக்கிய திருவடியையும், அபயஹஸ்தத்தையும், திரு முகத்தையும் தரிசிக்க வேண்டும்.

இவ்வாறு 2 வழிகளில் நடராஜரை தரிசிக்க வேண்டும்.

நடராஜர் ஓம் என்ற பிரணவ மந்திர வடிவில் காட்சி அளிக்கிறார். அவருக்கு துணையாக சிவகாமி அம்மன் அருள் செய்கிறார். இந்த நடராஜரும், சிவகாமியும் நாம் பார்க்கும் போது 2 உருவங்களாக தெரிந்தாலும் தத்துவப்படி அவர்கள் ஒன்றாக இணைந்தே அருள்செய்கிறார்கள். உதாரணமாக அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவனும்-சக்தியும் இணைந்தே காட்சி அளிக்கின்றனர்.

பரத கலையை கற்றுக்கொடுப்பவர்களும், பரத கலையை கற்றுக்கொள் பவர்களும் மாற்று மதத்தினராக இருந்தாலும் கூட அவர்கள் சிதம்பர நடராஜரை முன்னுதாரணமாக வைத்து வணங்குகிறார்கள். தங்களுடைய வீடுகள், வரவேற்பு அறைகளில் நடராஜர் சிலையை வைத்து மகிழ்கிறார்கள்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு இந்தியாவின் சார்பில் நம்நாட்டு அடையாள சின்னமாக நம்முன்னோர்கள் நடராஜர் சிலையையே பரிசாக அளிக்க அனுமதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

சைவ சமயத்துக்கு உருவகமாக 2 திருவுருவங்கள் பழக்கத்தில் உள்ளன. முதலில் சிவலிங்க வழிபாட்டை கூறலாம். சிவலிங்கத்துக்கு சிறப்பு உருவமாக சிதம்பரம் நடராஜர் சிலையை நம்முன்னோர்கள் கண்டிருக்கிறார்கள் என்பது மேன்மையான சிறப்பாகும்.

மேலும் பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி.

பக்தர்கள் தாங்கள் பிறந்த நாளிலோ, பிறந்த நட்சத்திரத்திலோ நடராஜ பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.

தகவல்:

வெங்கடேசதீட்சிதர்
சிதம்பரம் நடராஜர் கோவில்.
செல்: 98944-06321.
Tags:    

Similar News