செய்திகள்
அறிவியல் கல்லூரி முன்பு மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

நாகை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

Published On 2021-11-20 11:08 GMT   |   Update On 2021-11-20 11:08 GMT
ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கோரி நாகை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட மாணவ, மாணவிகள் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் இருந்து கல்லூரி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால தாமதமாக கல்லூரிகள் திறக்கப்பட்டதால் ஆசிரியர்கள் இந்த பருவத்திற்கான பாடத்திட்டங்களை இன்னும் முடிக்கவில்லை. எனவே முறையான பயிற்சி இல்லாமல் நேரடி தேர்வு நடத்தினால் தேர்ச்சி விகிதம் குறையும்.

மாணவர்கள் நலன் கருதி நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் மூலம் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவ, மாணவிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News