ஆட்டோமொபைல்
ஜீப்

ஜீப் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி நிதி சலுகைகள் அறிவிப்பு

Published On 2020-05-29 10:54 GMT   |   Update On 2020-05-29 10:56 GMT
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் ஜீப் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதி சலுகைகளை அறிவித்துள்ளது.



ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (எஃப்சிஏ) நிறுவனம் ஜீப் ஃபார் ஆல் எனும் பெயரில் நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மிக எளிய மாத தவணை முறை வசதியை குறைந்த வட்டியில் வழங்குகிறது. இந்த சலுகையின் கீழ் பெண்களுக்கு 100 சதவீதம் ஆன்-ரோட் விலைக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது.

இத்துடன் திடீரென வேலையின்மை, விபத்து அல்லது உடல் நலம் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும் பட்சத்தில் காருக்கான கடன் தொகையில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த மாத தவணை வசதி முதல் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.


 
புதிய திட்டத்தின் மூலம் ஜீப் எஸ்யுவியை மேலும் அதிகளவு வாடிக்கையாளர்கள் வாங்குவர் என எஃப்சிஏ நம்புகிறது. குறைந்த வட்டி தொகை தேர்வு செய்யப்பட்ட வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதற்கென ஜீப் மற்றும் தனியார் துறை வங்கிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் கடன் தொகையை ஏழு ஆண்டுகளுக்கு மாத தவணை முறையில் செலுத்தலாம். புதிய சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது எஃப்சிஏ-வின் புக் மை ஜீப் முன்பதிவு முனையத்திற்கு சென்று பயன்பெறலாம்.
Tags:    

Similar News