ஆன்மிகம்
கபிலேஸ்வரசாமி

கபிலேஸ்வரசாமி கோவிலில் கார்த்திகை தீப விழா இன்று தொடக்கம்

Published On 2020-11-18 08:08 GMT   |   Update On 2020-11-18 08:08 GMT
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட கபிலேஸ்வரசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப விழா கணபதி ஹோமத்துடன் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட கபிலேஸ்வரசாமி கோவிலில் கார்த்திகை தீப விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கணபதி ஹோமத்துடன் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் தேவஸ்தான இணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, ஆய்வாளர் ரெட்டிசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளை (வியாழக்கிழமை)திரிலோச்சன கவுரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. முன்னதாக நேற்று விநாயகருக்கு பிடித்தமான பொருட்கள் வைத்து பூஜைகள் நடந்தன.
Tags:    

Similar News