செய்திகள்
பரூக் அப்துல்லா

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் - பரூக் அப்துல்லா

Published On 2021-02-21 18:13 GMT   |   Update On 2021-02-21 18:13 GMT
பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீநகர்:

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது போல, பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் இன்னும் இருப்பது உண்மைதான். பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினால் அது தவறானது. பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால் நாம் கண்டிப்பாக நமது அண்டை நாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

நண்பர்களை மாற்றலாம், அண்டை நாடுகளை மாற்ற முடியாது என்ற வாஜ்பாயின் கூற்று எனக்கு நினைவில் உள்ளது என தெரிவித்தார்.
Tags:    

Similar News