ஆட்டோமொபைல்

கியா செல்டோஸ் புதிய டீசர் வெளியீடு

Published On 2019-06-08 11:34 GMT   |   Update On 2019-06-08 11:34 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் செல்டோஸ் காரின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது.



கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தனது புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் வாகனம் ஹூன்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காருக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் செல்டோஸ் என்ற பெயரில் அறிமுகமாக இருக்கிறது.

முன்னதாக இந்த கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் எஸ்.பி. கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தற்சமயம் புத்தம் புதிய எஸ்.யு.வி. கார் உற்பத்திக்கு தயாராகி விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த காரின் புகைப்படங்கள் இணையத்தில் பலமுறை வெளியாகிவிட்ட நிலையில், செல்டோஸ் காரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

டீசரின் படி புதிய செல்டோஸ் காரில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், க்ரோம் சரவுண்ட் செய்யப்பட்ட கிரில் வழங்கப்படுகிறது. செல்டோஸ் காரின் வெளிப்புற வடிவமைப்பு அதிநவீனமாக காட்சியளிக்கிறது. கியா செல்டோஸ் கார் இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் டஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.



காரின் உள்புறம் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம். இதுதவிர கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் காரில் எஸ்.யு.வி. பிரிவு வாகனங்களில் பல்வேறு முதல்முறை அம்சங்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கியா செல்டோஸ் சீன சந்தைக்கான காரில் இருக்கைகளில் வெப்பத்தை வெளிப்படுத்தும் அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை புத்தம் புதிய கியா செல்டோஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.



அந்த வகையில் T-GDi என்ஜின்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.0-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர் அல்லது 1.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என தெரிகிறது. 

இதன் டீசல் வேரிண்ட் Nu 2.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என கூறப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸமிஷன் வசதி பயனர் விரும்பினால் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News