செய்திகள்
இந்திரா உணவகங்களில் தொழிலாளர்களுக்கு இலவச உணவு

இந்திரா உணவகங்களில் தொழிலாளர்களுக்கு இலவச உணவு: கர்நாடக அரசு அறிவிப்பு

Published On 2021-05-12 03:48 GMT   |   Update On 2021-05-12 03:48 GMT
இந்திரா உணவகங்களில் கூலித்தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை மக்கள் உணவு பெற்று சாப்பிடலாம் என்று அரசு கூறியுள்ளது. வருகிற 24-ந் தேதி வரை இந்த இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அதிகவேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக அரசு கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கூலித்தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை, கர்நாடகத்தில் உள்ள இந்திரா உணவகங்களில் மூன்று நேரமும் இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதாவது கூலித்தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை மக்கள் இந்த உணவகங்களில் உணவு பெற்று சாப்பிடலாம் என்று அரசு கூறியுள்ளது. வருகிற 24-ந் தேதி வரை இந்த இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் எத்தனை பேருக்கு உணவு வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை

சம்பந்தப்பட்ட உணவகங்களின் நிர்வாகத்தினர் குறித்து வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News