தொழில்நுட்பம்
ரவி சங்கர் பிரசாத்

கிராமங்களில் இலவச வைபை வசதி மார்ச் 2020 வரை வழங்கப்படும்

Published On 2019-12-27 05:11 GMT   |   Update On 2019-12-27 05:11 GMT
இந்திய கிராம பகுதிகளில் பாரத்நெட் திட்டத்தின் கீழ் இலவச வைபை சேவை மார்ச் 2020 வரை வழங்கப்படும் என மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.



இந்தியா முழுக்க கிராம பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள இலவச வைபை சேவையான பாரத்நெட் மார்ச் 2020 வரை வழங்கப்படும் என மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப  மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

பாரத்நெட் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இதுவரை சுமார் 1.3 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இலவச வைபை சேவை வழங்கப்படுகிறது. இலவச வைபை சேவையினை இந்தியா முழுக்க 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.



தற்சமயம் பாரத்நெட் தி்ட்டத்தின் கீழ் சுமார் 48,000 கிராமங்களில் வைபை வசதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பொது சேவை மையங்களிலும் வங்கி சேவைகள் வழங்கப்படும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். மேலும் இவை டிஜிட்டல் சேவைகளை வழங்கும் பகுதிகளாகவும் செயல்படும் என அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் கிரமாங்களாக மாற்றப்பட இருக்கின்றன. ஹரியானாவின் ரெவாரி மாவட்டம் டிஜிட்டல் கிரமாமமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொது சேவை மையம் கிராம அளவில் பயன்படுத்தப்படுகிறது. 

டிஜிட்டல் கிராமங்கள் இணைக்கப்பட்ட கிராமமாக உருவாக்கப்படும். இங்கு பொதுமக்கள் மத்திய அரசின் செயல்திட்டங்களை இ சேவை மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் ஊரக பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News