செய்திகள்
பிசி பட்டீல்

நில சீர்திருத்த சட்ட திருத்தம்: அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கும் காங்கிரஸ்- பி.சி.பட்டீல் குற்றச்சாட்டு

Published On 2020-09-29 01:55 GMT   |   Update On 2020-09-29 01:55 GMT
நில சீர்திருத்த சட்ட திருத்தம் மூலம், பயன்படுத்தப்படாமல் உள்ள 40 ஆயிரம் எக்டேர் நிலம் விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும். காங்கிரஸ் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்கிறார்கள் என்று கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்று. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்தம் குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும் நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.

சட்டசபையிலும் இதுபற்றி அவர்கள் கூறியபடி நில சீர்திருத்த சட்டத்தில் நாங்கள் திருத்தம் செய்துள்ளோம். ஆனால் இப்போது அவர்கள் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்கிறார்கள். இது சரியல்ல. பிரதமர் மோடி, சிறு விவசாயிகளும் பயன் பெறும் வகையில் வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்துள்ளார். நில சீர்திருத்த சட்ட திருத்தம் மூலம், பயன்படுத்தப்படாமல் உள்ள 40 ஆயிரம் எக்டேர் நிலம் விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும். விவசாயத்துறையை ஊக்கப்படுத்தவே நில சீர்திருத்த சட்டத்தில் நாங்கள் திருத்தம் செய்துள்ளோம். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News