லைஃப்ஸ்டைல்
மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்

உடலுக்கு குளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்

Published On 2021-04-17 05:12 GMT   |   Update On 2021-04-17 05:12 GMT
மங்குஸ்தான் பழத்தில் சத்து மிக அதிகம். இந்த ஜூஸ் நமது தோலை பாதுகாக்கும். நம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கற்றாழை உடம்பை மிகவும் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்

மங்குஸ்தான் - 1/4 கப் (சதை மட்டும்),
கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்,  
தேன் - தேவைக்கேற்ப,
குளிர்ந்த நீர் - 100 மில்லி.

செய்முறை

மங்குஸ்தானை உரித்து உள்ளே உள்ள பழத்தை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

கற்றாழையை வெட்டி உள் இருக்கும் சதையை எடுத்து நன்கு கழுவி வைக்கவும்.

மிக்சியில் மங்குஸ்தானையும், கற்றாழையையும், தேனையும் சேர்த்து நன்கு அரைத்து பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐஸ்கட்டி போட்டு பரிமாறவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News