உலகம்
வின்ட்சர் கோட்டை

ராணி எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் கோட்டை மீது பறக்க தடை

Published On 2022-01-11 19:54 GMT   |   Update On 2022-01-11 19:54 GMT
விண்ட்சர் கோட்டையைச் சுற்றி 1.25 நாட்டிக்கல் மைல் சுற்றளவில் 2,500 அடி வரை வான்வெளி பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.
லண்டன்:

தென்கிழக்கு இங்கிலாந்தின் பர்க்ஷெயரில் உள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வின்ட்சர் கோட்டை அமைந்துள்ளது.

கடந்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வின்ட்சர் கோட்டைக்குள் அத்துமீறி ஆயுதத்துடன் நுழைய முயன்ற வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், வின்ட்சர் கோட்டை மீது பாதுகாப்பு காரணங்களுக்காக வான்வெளியில் எதுவும் பறக்கக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளது இங்கிலாந்து காவல்துறை.

இங்கிலாந்து காவல்துறை சிவில் ஏவியேஷன் ஆணையத்திற்கு விண்ணப்பித்ததை அடுத்து இந்த பாதுகாப்பு வின்ட்சர் கோட்டைக்கு வழங்கப்பட்டுள்ளது.

வின்ட்சர் கோட்டையைச் சுற்றியுள்ள 1.25 கடல் மைல் சுற்றளவில் 2,500 அடி வரை வான்வெளியைப் பயன்படுத்த இந்த உத்தரவு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வரும். தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய எந்த விமானங்களுக்கும் அங்கீகாரம் தேவைப்படும் என தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News