உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பேராசிரியர்களுக்கு பணியிைட பயிற்சி

Published On 2022-05-05 09:54 GMT   |   Update On 2022-05-05 09:54 GMT
பேராசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி 2 நாட்களாக நடைபெறுகிறது.
கரூர் :

கரூர் அரசு கலைக்கல்லூரியில் இரு நாட்களுக்கு திருச்சி மற்றும் தஞ்சை மண்டலத்தை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளை சேர்ந்த ஆங்கில, கணினி அறிவியல் பேராசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படுவதாக கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் எஸ்.கவுசல்யா தேவி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது,  தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு இரு நாட்கள் பணியிடை பயிற்சி நடைபெறுகிறது.

இதையொட்டி கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கு இரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் உயர்கல்வித் தர மேம்பாடு, தொழில்நுட்ப வசதிகளை கற்பித்தலுக்கு பயன்படுத்துதல்,

கல்லூரிகளுக்கான தேசிய தர அங்கீகாரம் பெறுதல், மென்திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு, தொழில் துறையில் எதிர்காலத்தில் ஏற்படும் பணி வாய்ப்புகள் மற்றும் அதற்கேற்ற திறன்கள் குறித்து நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான பயிற்சியில் திருச்சி, தஞ்சை மண்டல அரசு மற்றும் அரசு உதவிபெறும் 36 கல்லூரிகளை சேர்ந்த 100 பேராசிரியர்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News