லைஃப்ஸ்டைல்
​ஹலாசனம்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோகாசனங்கள்

Published On 2020-05-27 04:00 GMT   |   Update On 2020-05-27 04:00 GMT
சர்க்கரை நோயாளிகள் நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவு, மாத்திரையுடன் சேர்த்து இந்த யோகாசனங்களையும் செய்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவு, மாத்திரையுடன் சேர்த்து இந்த யோகாசனங்களையும் செய்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் கிட்னி பிரச்சனைகள் ரத்தக்கொதிப்பு பிரச்சனைகள் போன்றவற்றையும் இந்த யோகா மூலம் குணப்படுத்தி விடலாம். வீட்டிலிருந்தே சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க நான்கு வகையான யோகாவும், அதற்கான முறைகளை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

விருகாசனம்

நன்மைகள்:

குறிப்பிட்ட ஹார்மோனை சுரக்க உதவுகிறது. முக்கியமாக உடலில் உள்ள கணையம் எனப்படும் உறுப்பிற்கு மிகவும் நன்மை சேர்க்கக்கூடிய ஹார்மோன்களை உருவாக்குகிறது.

செய்முறை:

முதலில் நேராக நின்று கொண்டிருக்க வேண்டும். உங்களது இரண்டு கால்களையும் ஒன்றாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். உங்களது மூட்டு கால் மற்றும் கை இரண்டையும் நேராக வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது உங்களது வலது பாதத்தை,உங்களது இடது தொடையில் வைக்க முயற்சி செய்ய வேண்டும். முடிந்தவரை சரியான கோணத்தில் இருக்க வேண்டும். உங்களது வலது பாதத்தை இடது தொடையில் வைக்க முடியவில்லை என்றால், உங்களது இடது பாதத்தை வலது தொடையில் வைக்க வேண்டும். உங்களது உடலின் கோணம் சீராக இருக்க வேண்டும். உங்களது இடது காலை தரையில் இருக்கும் பொழுது அதுதான் உங்களை தாங்கி இருக்கும். மிகவும் நேர்த்தியுடன் செய்யவேண்டும். உங்களது இரண்டு கைகளையும் வணக்கம் சொல்வது போல் கூப்பி வைக்க வேண்டும். உங்கள் இரண்டு கைகளும் உங்கள் நெஞ்சுக்கு நடுவில் இருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சு பகுதியில் இருக்கும் உங்கள் இரண்டு கைகளையும் அதே கோணத்தில் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த வரை நேராக நிற்கவேண்டும். நேராக பார்க்க வேண்டும். இப்படியே ஒரு 10 நொடிகள் இருக்க வேண்டும் இப்பொழுது உங்களது கைகளை கீழே இறக்கி விட வேண்டும். ஏற்கனவே இருந்த உங்கள் நெஞ்சுப்பகுதியில் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் இதேபோல் மீண்டும் செய்து வர வேண்டும்.

​தனுராசனம்

நன்மைகள்:

இந்த தனுராசனம் செய்வதினால் உங்கள் கணையத்தின் செயல்பாடு மற்றும் குடல்களின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலும் உங்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. கணையம் ஈரல் போன்ற உறுப்புகளில் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

செய்முறை:

முதலில் தரையில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். பின்பு மெதுவாக உங்களது இரண்டு கைகளையும் உங்கள் முதுகுக்கு மேல் கொண்டு வர வேண்டும். அதேபோல் உங்கள் இரண்டு கால்களையும் வளைத்து உங்கள் முதுகுக்கு மேல் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். இப்பொழுது உங்களது இரண்டு கைகளை வைத்து இரண்டு கால்களை பற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் கிட்டத்தட்ட ஒரு வட்ட வடிவில் தோற்றமளிக்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து பின்பு மூச்சை வெளியே விடவேண்டும். நேராக பார்க்க வேண்டும் முடிந்தவரை கட்டுக்கோப்புடன் இந்த ஆசனத்தில் சிறிது நேரம் இருக்கவேண்டும். மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும். பின்பு மூச்சு விட்டுவிடவேண்டும். ஒரு பதினைந்து முதல் இருபது நொடிகள் வரை மூச்சை உள்ளிழுத்து பின்பு மூச்சை வெளியே விடவேண்டும்.

​ஹலாசனம்

நன்மைகள்:

ஹலாசனம் என்பது கணையத்தை உற்சாகமாக வைத்திருக்க உதவி செய்கிறது. மேலும் நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும், ஒரு மசாஜ் செய்வதுபோல் நன்மையை தருகிறது. இது கிட்னி ஈரல் போன்ற உறுப்புகளுக்கு பலத்தை அதிகரிக்கிறது.

செய்முறை:

முதலில் தரையில் நன்றாக நீட்டி படுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் இருக்கைகளும் நேராக இருக்க வேண்டும். இப்பொழுது உங்களது காலை கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கால்களையும் மேலே தூக்கவேண்டும். முடிந்த அளவு உங்கள் கை நேராகவே இருக்கவேண்டும். உங்கள் இரு கால்களையும் மேலே கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி உங்கள் தலைக்கு மேல் வைக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் கைகள் தரையிலேயே இருக்கவேண்டும் நேராக. ஆனால் உங்கள் இரண்டு கால்களும் உங்கள் தலைக்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் இரண்டு கால்களையும் இன்னும் மேலே உயர்த்தி உங்கள் தலையையும் தாண்டி இன்னும் முன்னேறி செல்ல வேண்டும். சரியாக உங்களது தொடை உங்கள் முகத்திற்கு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் கால் விரல்நுனிகள் உங்கள் தலைக்கு மேலே ஒரு அடிக்கு மேல் தரையில் பட்டிருக்கும். உங்களது கால்கள் இப்பொழுது 180 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். இப்பொழுது மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவேண்டும். ஒரு நிமிடம் கழித்து எழுந்து கொள்ளலாம். ஆரம்ப கட்டத்தில் செய்பவர்கள் ஒரு நிமிடம் வரை செய்ய தேவையில்லை முடிந்த அளவு செய்யலாம்.
​அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்

நன்மைகள்:

இந்த ஆசனம் உங்களது கிட்னி, கணையம், சிறுகுடல் ஈரல் போன்றவற்றிற்கு மிகவும் நன்மை செய்கிறது. உடலில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய காரணிகளை வெளியேற்றிவிடுகிறது. முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் உடலில் உள்ள நரம்புகள், முதுகெலும்பு, போன்ற அனைத்திற்கும் மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

செய்முறை:

முதலில் தரையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும், பின்பு உங்களது வலது காலை எடுத்து உங்கள் இடது காலின் தொடை மேலே உள்ள தரையில் வைத்துக் கொள்ள வேண்டும், தரையில் சம்மணம் போட்டு உட்கார வேண்டும். இப்பொழுது உங்களது இடது கையை உங்களது வலது காலின் முட்டிக்கு மேல் கையை விரித்து வைக்கவேண்டும். உங்களது வலது கை கீழே தரையை தொட்டிருக்க வேண்டும். இப்படியே முடிந்தவரை சில நொடிகள் இருக்க வேண்டும்.
Tags:    

Similar News