தொழில்நுட்பம்
ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷன்

ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

Published On 2019-06-29 05:16 GMT   |   Update On 2019-06-29 05:16 GMT
ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ரியல்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த தனது ரியல்மி எக்ஸ் மாடலின் ஸ்பைடர்-மேன் ஃபார் ஃபிரம் ஹோம் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மார்வெல் நிறுவனத்துடனான கூட்டணியில் வெளியாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.

ஸ்மார்ட்போனுடன் கஸ்டம் ஸ்பைடர்-மேன் தீம் மற்றும் ஐகான்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6 வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 ஆம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா. சோனி IMX586 சென்சார், ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, கிரேடியண்ட் பேக் மற்றும் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சூப்பர் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்:

- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய ஸ்பெஷல் எடிஷன் பெட்டியில் சிவப்பு நிறத்தாலான கஸ்டம் கேஸ் வித்தியாசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர ஸ்டான்டர்டு எடிஷனில் வழங்கப்படுவதை போன்ற சார்ஜர், கேபிள் போன்றவை இடம்பெற்றிருக்கிறது. இதன் விலை 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 18,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
Tags:    

Similar News