தொழில்நுட்பம்
விவோ வி19 டீசர்

அசத்தல் அம்சங்களுடன் விரைவில் இந்தியா வரும் விவோ வி19

Published On 2020-03-23 07:15 GMT   |   Update On 2020-03-23 07:15 GMT
விவோ நிறுவனத்தின் புதிய வி19 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



விவோ நிறுவனம் தனது வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 3-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்வதாக விவோ பதிவிட்ட ட்வீட் தற்சமயம் அழிக்கப்பட்டு இருக்கிறது.

வெளியீட்டிற்கு முன் விவோ வி19 ஸ்மார்ட்போன் பற்றிய சில தகவல்களை அந்நிறுவனம் அம்பலப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் விவோ வி19 ஸ்மார்ட்போனில் மொத்தம் ஆறு கேமராக்கள் வழங்கப்பட இருக்கிறது. இதில் பின்புறம் நான்கு கேமரா சென்சார்களும், முன்புறம் இரு கேமரா சென்சார் பொருத்தப்படுகிறது.

முன்புறம் 32 எம்.பி. மற்றும் 8 எம்.பி. சென்சார் பயன்படுத்தப்பட இருப்பதாக விவோ தெரிவித்துள்ளது. இதுவரை விவோ பதிவிட்ட விளம்பர படங்களின்படி விவோ வி19 ஸ்மார்ட்போன் சூப்பர் நைட் செல்ஃபி, ஆரா ஸ்கிரீன் லைட் மற்றும் சூப்பர் வைடு ஆங்கில் புகைப்படங்களை எடுக்கும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 



மேலும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.  அந்த வகையில் இதில் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் எதிர்பார்க்க முடியும்.

புதிய விவோ வி19 ஸ்மார்ட்போனில் AMOLED ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இதனால் இதில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள பிரைமரி கேமரா சென்சார்கள் L வடிவத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 

இதற்கான ஃபிளாஷ் மாட்யூல் கேமரா சென்சாரின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் விவோ வி19 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 24,990 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News