செய்திகள்
காணொலி வாயிலாக நடந்த கவர்னர்கள் மாநாடு

தேசிய கல்விக் கொள்கை- ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு தொடங்கியது

Published On 2020-09-07 05:26 GMT   |   Update On 2020-09-07 05:26 GMT
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கவனர்கள் பங்கேற்கும் காணொலி மாநாடு இன்று தொடங்கியது.
புதுடெல்லி:

இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கைக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்யவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும் இந்த புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு புதிய கல்விக் கொள்கையின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் புதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று தொடங்கியது. மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினர்.

‘உயர்கல்வியை மேம்படுத்துவதில் தேசிய கல்வி கொள்கையின் பங்கு’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநில கவர்னர்கள், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி மந்திரிகள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 
Tags:    

Similar News