ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

புதிய பெட்ரோல் என்ஜின் கொண்ட பென்ஸ் சி கிளாஸ் அறிமுகம்

Published On 2020-04-22 10:42 GMT   |   Update On 2020-04-22 10:42 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சி கிளாஸ் செடான் மாடலில் புதிய என்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் சத்தமில்லாமல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட சி200 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய என்ஜின் சி200 பிரைம் மற்றும் சி200 புரோகிரெசிவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 40.90 லட்சம் மற்றும் ரூ. 46.54 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பிஎஸ்6 ரக 2.0 லிட்டர் மோட்டார் முந்தைய 1.5 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ஏஎம்ஜி இல்லாத மாடல் மொத்தம் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை ரூ. 4.90 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 51.25 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 



மெர்சிடிஸ் பென்ஸ் சி200 மாடலில் 1991சிசி நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி திறனை 5800 முதல் 6100 ஆர்பிஎம் செயல்திறனில் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.  

இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெறும் 7.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 239 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

புதிய மாடலில் பெட்ரோல் என்ஜின் தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இதன் தோற்றம் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
Tags:    

Similar News