ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பட்டாபிஷேக விழா

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பட்டாபிஷேக விழா

Published On 2021-04-24 08:17 GMT   |   Update On 2021-04-24 08:17 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பட்டாபிஷேக விழாயையொட்டி சுப்ரபாதம், தோமாலா சேவா, சஹஸ்ரநாமர்ச்சனை, உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நேற்று இரவு ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாதம், தோமாலா சேவா, சஹஸ்ரநாமர்ச்சனை, காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ராம பட்டாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக விஸ்வசேனர் பூஜை, புண்யாவதனம், சத்யோ அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், அக்னி பிரதிஷ்டை, யஜ்மணி சங்கல்பம், சாமிக்கு வஸ்திர சமர்ப்பணம், லட்சுமி பிரதிமா பூஜை, சாமிக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது. சீதா, ராமர், லட்சுமணர், அஞ்சநேயருக்கு பிரத்யேக ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. மேலும் ஆரத்தி, சதுர்வேத பாராயணம், மகா மங்கள ஹாரத்தி, ேத ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. ராமர் பட்டாபிஷேக விழா முடிந்ததும் கோவில் வளாகத்தில் உற்சவர்கள் உலா வந்தனர்.

நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜு, கண்காணிப்பாளர் ஸ்ரீ ரமேஷ், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News