லைஃப்ஸ்டைல்
இரவில் தூங்கும் போது இறுக்கமான பிரா அணிந்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்

இரவில் தூங்கும் போது இறுக்கமான பிரா அணிந்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்

Published On 2021-03-16 08:23 GMT   |   Update On 2021-03-16 08:23 GMT
இரவு படுக்கும்போது பிரா அணியலாமா? வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் மற்றும் சௌகரியத்தைப் பொருத்தது. ஆனால் இரவில் தூங்கும் போது இறுக்கமான பிரா அணிந்தால் என்ன பிரச்சனைகள் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.
தூங்கும்போது பிரா அணியலாமா என்னும் கேள்வி பல பெண்களிடம் இருக்கிறது. ஆனால் எதுவாயினும் அது அவர்களுடைய சௌகரியத்தைப் பொருத்தது என சிலர் கருத்துக்களை முன் வைப்பார்கள். அது அவரவர் விருப்பம் என்பதை விட அவ்வாறு செய்வதால் மருத்துவ ரீதியாக நல்லதா கெட்டதா என்னும் வாதமும் முன் வைக்கப்படுகிறது.

உண்மையில் மருத்துவர்களின் வாய் வழியில் இரவு பிரா அணிவதால் மார்பகங்கள் தளர்வடைவதை தவிர்க்கலாம் என்கின்றனர். ஆனால் அலுவலகம் செல்லும் பெண்கள் நாள் முழுவதும் இறுக்கமான பிராவை அணிந்திருப்பதால் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அதை கழட்டி எறிவதைதான் பெரிய ரிலீஃபாக நினைக்கின்றனர். எனவே அவர்கள் சௌகரியத்தைதான் பெரிதாக நினைக்கின்றனர்.

பொதுவாக மார்பகங்கள் தளர்வடைதல் என்பது வயது செல்ல செல்ல இயற்கையாக நிகழக்கூடியது. அதை பிரா அணிவதால் தடுக்கமுடியாது. இருப்பினும் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள் பெண்களுக்கு சங்கடத்தையும், அசௌகரியத்தையும் கொடுக்கலாம். எனவே இதுபோன்ற பிராக்கள்தான் அவர்களுக்கான வரமாக உள்ளது. அதேபோல் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கும் பிரா அணிவது சௌகரியத்தை தரும். இரவு புரண்டு படுக்கும்போது அவை அதிக வலியை தரலாம். எனவே பிரா நல்ல சாய்ஸாக இருக்கும்.

எதுவாயினும் உங்களுக்கு ஃபிட்டான , சரியான அளவிலான பிராக்களை அணியுங்கள். காட்டன் துணியால் ஆனா பிரா அணிவது காற்றோட்டமாக இருக்கும். இறுக்கமான பிரா அணிவது வேறு ஏதேனும் பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.
Tags:    

Similar News