செய்திகள்
வாட்ஸ்அப் (கோப்பு படம்)

புது பிரைவசி பாலிசியை திரும்பப்பெறுங்கள் - வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய அரசு கடிதம்

Published On 2021-01-19 11:24 GMT   |   Update On 2021-01-19 11:24 GMT
புது பிரைவசி பாலிசி மாற்றத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வாட்ஸ்அப் செயலியின் உலகளாவிய தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
புதுடெல்லி:

வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகளை மாற்றி அமைத்தது. அதன்படி, பயனாளர்களிடம் பெறப்படும், பயனாளர்கள் இணையத்தில் தேடும் தகவல்களையும், தரவுகளையும் உலகம் முழுவதும் பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் வாட்ஸ்அப் பகிர உள்ளது.  
 
புதிய பிரைவசி பாலிசியை அனுமதி அளிக்காத பட்சத்தில் பயனர்கள், பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என வாட்ஸ்அப் தெரிவித்தது. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பயனாளார்களின் தரவுகளை வாட்ஸ்அப் பகிர உள்ளது என்ற தகவல் பரவியதையடுத்து பல்வேறு தரப்பினரும் வாட்ஸ்அப்பை விட்டு விலகி டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளுக்கு மாறினர். இதனால், புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்துவதை மே 15-ம் தேதிக்கு வாட்ஸ் அப் நிறுவனம் தள்ளிவைத்தது.

இந்நிலையில், இந்தியாவில் வாட்ஸ்அப் தனது புது பிரைவசி பாலிசியை திரும்பப்பெற வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்தின் உலகலாவிய தலைமை செயல் அதிகாரி  வில் கேத்சாட்-டிற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மேலும், அந்த கடிதத்தில் வாட்ஸ் அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயனாளர் தரவுகளின் பாதுகாப்பு தொடர்பாக 14 கேள்விகளை மத்திய
அரசு எழுப்பியுள்ளது. இந்த கேள்விகளுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் பதிலளிக்க அளிக்க வேண்டும் என மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News