ஆன்மிகம்
மகாதேவர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் திருவாதிரை திருவிழா தொடங்கியது

Published On 2020-12-23 07:32 GMT   |   Update On 2020-12-23 07:32 GMT
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டத்தின் 2-வது சிவாலயம் திக்குறிச்சி மகாதேவர் கோவில். இங்கு மார்கழி திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 31-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல்நாளான நேற்று சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் கொடியேற்றம் போன்றவை நடந்தது. இதில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் கணபதி ஹோமம், தாரை, கலசாபிஷேகம், புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெறும்.

6-ம் திருவிழாவான 27-ந் தேதி பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் நந்தி பகவான் மற்றும் மகாதேவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். 9-ம் திருவிழாவான 30-ந் தேதி இரவு 9 மணிக்கு மகாதேவர் பல்லக்கில் பள்ளி வேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு தர்மசாஸ்தா கோவில் அருகே செல்லும் நிகழ்வு நடக்கிறது,

திருவிழாவின் இறுதி நாளான 31-ந்தேதி தாமிரபரணி ஆற்றில் மகாதேவருக்கு ஆறாட்டு நடக்கிறது.
Tags:    

Similar News