ஆன்மிகம்
கரபுரநாதர் கோவில்

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேரோட்டம் ரத்து

Published On 2021-04-23 06:42 GMT   |   Update On 2021-04-23 06:42 GMT
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து சாமி தரிசனம் செய்யலாம் என்றும், தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் செயல் அலுவலர் சங்கர் தெரிவித்துள்ளார்.
சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வருகிற 26-ந் தேதி நடைபெற இருந்த சித்ரா பவுர்ணமி தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 24-ந் தேதி சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். 26-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று சாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

இதில் பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து சாமி தரிசனம் செய்யலாம் என்றும், தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் செயல் அலுவலர் சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News