செய்திகள்

புதுவையில் பக்ரீத் சிறப்பு தொழுகை

Published On 2018-08-22 11:07 GMT   |   Update On 2018-08-22 11:07 GMT
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையினை உற்சாகத்துடன் கொண்டாடினர்.அதன்படி புதுவை பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

புதுச்சேரி:

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையினை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

தியாகத்தை உணர்த்தும் வகையிலும் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாளாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது. அதன்படி புதுவை ஈத்கா திடலிலும், முல்லா வீதி முகமதியார் பள்ளி வாசல் உள்பட அனைத்து பள்ளி வாசல்களிலும் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.

இதேபோல், வில்லியனூர் ஜூம்மா மசூதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையை தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

கேரள மாநிலத்தில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதோடு, கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெள்ள நிவாரண நிதியும் திரட்டப்பட்டது.

பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு புதுவை கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா பள்ளி வாசலிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News