செய்திகள்
புஜாரா ரோகித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்

Published On 2019-08-18 09:57 GMT   |   Update On 2019-08-18 09:57 GMT
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு முன் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

இந்த பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. விராட் கோலி இல்லாததால் ரகானே கேப்டனாக செயல்பட்டார்.

கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராகுல் 36 ரன்களும், அகர்வால் 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த புஜாரா சதம் அடித்தார். ஆனால் கேப்டனான ரகானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ரோகித் சர்ா 68 ரன்களும், ரிஷப் பந்த் 33 ரன்களும் சேர்த்தனர்.

விஹாரி 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்க, இந்தியா முதல் நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்துள்ளது. விஹாரி 37 ரன்களுடனும், ஜடேஜா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News