உள்ளூர் செய்திகள்
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-05-06 10:24 GMT   |   Update On 2022-05-06 10:24 GMT
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை,

நாட்டறம்பள்ளி அருகே கலைஞர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையில் திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா  நேற்று காலை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு அப்போது அரசு மருத்துவமனையில் தினசரி புறநோயாளிகள் எத்தனை பேர் வருகின்றனர். என குறித்து அதன் பதிவேடுகளை பார்வையிட்டார்அவசர சிகிச்சை பிரிவு வார்டு திடிரென அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதனையும் நேரடியாக சென்று பார்வையிட்டார் மேலும் தீ விபத்து தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து டாக்டருக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன் பிறகு தீ விபத்து தடுக்கும் உபகரணங்கள் அனைத்தும் சரியாக வைக்கப்பட்டு உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

குழந்தைகள் மருத்துவ முகாம்அ தன் பிறகு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நடைப்பெற்று வரும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

தற்போது கோடைக்கால துவங்கி கத்திரி வெயிலில் காலநிலை சுற்றுப்புற சூழ்நிலைகளால் எளிதில் பாதிக்கப்பட்டு ஆட்படக்கூடிய பருவம் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல், வயிறு வலி வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், மலச்சிக்கல் சிறுநீர் உபாதைகள் போன்றவை பாதிக்கும் நோய் அறிகுறிகளாக உள்ளன. 

மேலும் அடிக்கடி ஏற்படும் நோய்களால் குழந்தைகள் ரத்தசோகை வயதிற்கும் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இல்லாமை வயதிற்கேற்ற உயரமின்னை போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்படக்கூடும் என்பதால் இது போன்ற குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

மேலும் தமிழக அரசு ஆர்பிஎஸ்கே எனப்படும் பள்ளி நல திட்டத்தின் கீழ் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் ஆகியோர் முறையே ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் கொண்டு தனித்தனியாக பள்ளிகளிலேயே மருத்துவ ஆய்வு செய்யப்படுகின்றன என தெரிவித்தார் மேலும் சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற குழந்தைகளை சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது நாட்டறம்பள்ளி அரசு தலைமை மருத்துவர் எஸ்.திலீபன் மற்றும் அரசு மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News