தொழில்நுட்பம்
சியோமி

குறைந்த விலையில் ரெட்மிபுக் உருவாக்கும் சியோமி

Published On 2020-06-14 06:17 GMT   |   Update On 2020-06-14 06:17 GMT
சியோமி நிறுவனம் குறைந்த விலையில் ரெட்மிபுக் லேப்டாப் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



சியோமி நிறுவனம் தனது குறைந்த விலை ரெட்மிபுக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் சியோமி நிறுவனம் தனது எம்ஐ நோட்புக் சீரிஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் சியோமி நிறுவனம் தனது பட்ஜெட் ரக லேப்டாப் மாடல்களையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டுக்கான பிரிவில் சியோமியின் ரெட்மிபுக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.



இந்திய சந்தையில் சியோமியின் ரெட்மிபுக் மாடல்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த லேப்டாப்களின் வித்தியாசமான வேரியண்ட்களை சியோமி அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. 

ஸ்மார்ட்போன்களை போன்றே லேப்டாப்களுக்கும் சியோமி நிறுவனம் இருவேறு சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் என பல்துறை பணிகள் முழுமையாக ஆன்லைன் வசம் மாறியுள்ள நிலையில், லேப்டாப்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

புதிய லேப்டாப் வாங்க நினைப்போர் பெரும்பாலும் பட்ஜெட் ரக லேப்டாப்களையே தேர்வு செய்கின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் சியோமி இதுபோன்ற வாடிக்கையாளர்களை குறிவைக்க சியோமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படகிறது.
Tags:    

Similar News