செய்திகள்
உடுமலை பகுதியில் கொடிகளிலேயே பறிக்காமல் விடப்பட்ட தர்ப்பூசணி பழங்கள்.

அழுகி வீணாகும் தர்ப்பூசணி பழங்கள்

Published On 2021-06-09 07:47 GMT   |   Update On 2021-06-09 11:27 GMT
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் வரவில்லை.மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதாலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதாலும் உள்ளூர் வியாபாரிகளால் பெரிய அளவில் தர்ப்பூசணி பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை.
உடுமலை:

உடல் வெப்பத்தை தணித்து, நீர்ச்சத்தை அதிகரிக்கும் பழங்களில் முதலிடம் பிடிப்பது தர்ப்பூசணியாகும். இதனால் ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யும் வகையில் விவசாயிகள் தர்ப்பூசணி சாகுபடி செய்வார்கள். அந்த மாதங்களில் சாலையோரங்களிலும்,காய்கறி மற்றும் பழச்சந்தைகளிலும் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

இந்தநிலையில் கொரோனா வைரசின் 2-ம் அலையால் தற்போது தர்ப்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் திருப்பூர் மாவட்டம்  உடுமலை பகுதியில் தர்ப்பூசணி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் தர்ப்பூசணிகளை பறிக்காமல் கொடிகளிலேயே விட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

கோடைகாலத்தை முன்னிட்டு நிலப்போர்வை அமைத்து தர்ப்பூசணி சாகுபடி மேற்கொண்டோம். திட்டமிட்டு சாகுபடி மேற்கொண்டதால் நல்ல விளைச்சலும் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா வைரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் மாற்றி விட்டது.

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் வரவில்லை. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதாலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதாலும் உள்ளூர் வியாபாரிகளால் பெரிய அளவில்  தர்ப்பூசணி பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை.இதனால் தர்ப்பூசணி பழங்களை பறிக்காமல் கொடிகளிலேயே விட்டு விட்டோம். 
Tags:    

Similar News