உள்ளூர் செய்திகள்
கோ-பூஜை வழிபாடு நடந்தது.

சட்டைநாதர் கோவிலில் கோபூஜை

Published On 2022-04-16 09:12 GMT   |   Update On 2022-04-16 09:12 GMT
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கோபூஜை வழிபாடு நடந்தது.
சீர்காழி:

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய சட்டைநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் மலை மீது தோணியப்பர், உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர்

ஆகிய சுவாமிகள் அருள் பாலிக்-கின்றனர். திருஞானசம்பந்தருக்கு , உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலம் ஆகும். காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர் இக்கோவில் தெற்கு கோபுர வாசல்

அருகில் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகருக்கு மஞ்சள் ,

திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு  தீபாராதனை காட்டப்பட்டது.

அதன்பின்னர் கொடிமரத்தின் அருகில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு  அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோசாலையில் இருந்து

வரவழைக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்றுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
 
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஹி பசு மாடு மற்றும் கன்றுக்கு பழங்களை வழங்கி வழி-பட்டுச் சென்றனர்தொடர்ந்து தமிழ் புத்தாண்டு வருட பிறப்பை ஒட்டி அஸ்திர தேவருக்கு

தீர்த்தவாரி வைபவம் நடந்தது.

Tags:    

Similar News