செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் ரூ.5.49 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட புதிய கட்டிடங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்

Published On 2021-10-17 08:44 GMT   |   Update On 2021-10-17 08:44 GMT
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்காக எண்ணற்ற திடங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, காங்கயம், பெதப்பம்பட்டி ஆகிய இடங்களில் ரூ.5.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக  நாளை 18 - ந்தேதி (திங்கட்கிழமை) திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்காக எண்ணற்ற திடங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் ஏலக்கூடம், காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் அலுவலகம், ஏலக்கூடம், பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் ஏலக்கூடம் மற்றும் சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

இந்த 3 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.5.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி  காட்சி வாயிலாக நாளை 18 - ந்தேதி  (திங்கட்கிழமை) திறந்து வைக்கிறார். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
Tags:    

Similar News