ஆன்மிகம்
தீர்த்தகிணறுகள் திறக்கப்படாததால் அந்த பகுதி பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை காணலாம்.

116 நாட்களை கடந்தும் ராமேசுவரம் கோவிலில் திறக்கப்படாத தீர்த்த கிணறுகள்

Published On 2021-08-19 07:54 GMT   |   Update On 2021-08-19 09:21 GMT
116 நாட்களை கடந்தும் ராமேசுவரம் கோவிலில் திறக்கப்படாத தீர்த்த கிணறுகளால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அதுபோல் ராமேசுவரம் கோவிலிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் கோவிலில் உள்ள 22 தீர்த்தகிணறுகளிலும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு தீர்த்த கிணறுகள் மூடப்பட்டன.

இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் மூடப்பட்டு 116 நாட்களை கடந்தும் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தீர்த்தக் கிணறுகளேயே நம்பி வாழும் 450-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் குடும்பத்தினர் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இதனால் யாத்திரை பணியாளர்கள் பலர் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே கட்டுப்பாடுகளுடனாவது ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளை திறந்து பக்தர்கள் நீராட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்களும் மற்றும் யாத்திரை பணியாளர்களும் இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News