ஆன்மிகம்
குபேர லிங்கத்துக்கு நடந்த பூஜையில் திரண்ட பக்தர்கள்

குபேர லிங்கத்துக்கு நடந்த பூஜையில் திரண்ட பக்தர்கள்

Published On 2019-11-25 05:51 GMT   |   Update On 2019-11-25 05:51 GMT
குபேரர் கிரிவலம் என்பது குபேர லிங்கத்தில் ஆரம்பித்து குபேர லிங்கத்திலேயே முடிப்பது சிறப்புக்குரியதாகும். அதன்படி கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அ‌‌ஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. இதில் 7-வது லிங்கமாக குபேர லிங்கம் கோவில் உள்ளது. கார்த்திகை மாத சிவராத்திரியன்று குபேர லிங்கத்தை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் குபேரர் வணங்கிய பின் கிரிவலம் வருவதாகவும், அந்த சமயத்தில் கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

சாதாரணமாக கிரிவலம் என்பது எப்போது வேண்டுமனாலும் செல்லலாம். இதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் முன்பிருந்து பக்தர்கள் கிரிவலம் தொடங்குவர். முதலில் இந்திர லிங்கத்தை வணங்கி படிப் படிப்படியாக அனைத்து லிங்கங்களையும் வணங்கியபின்பு இறுதியாக ஈசான்ய லிங்கத்தை தரிசனம் செய்வர். அதன்பின் ராஜகோபுரம் முன்வந்து கிரிவலத்தை முடிக்க வேண்டும்.

ஆனால் குபேரர் கிரிவலம் என்பது குபேர லிங்கத்தில் ஆரம்பித்து குபேர லிங்கத்திலேயே முடிப்பது சிறப்புக்குரியதாகும். அதன்படி நேற்று குபேரர் கிரிவலம் என்பதால் கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

மாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை குபேர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.

சாமியை தரிசனம் செய்த பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
Tags:    

Similar News