ஆன்மிகம்
குருவித்துறை கோவிலில் சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

குருவித்துறை கோவிலில் சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-11-15 06:04 GMT   |   Update On 2021-11-15 06:04 GMT
குருவித்துறை கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் முன்பு பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் சுயம்புவாக குருபகவான் உள்ளார். நேற்று முன்தினம் மகரராசியில் இருந்து கும்பராசிக்கு குருப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கொரோனா தொற்றுநோய் காரணமாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுடன் குருப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். யாகபூஜைக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் சன்னதி அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் சன்னதி திறக்கப்பட்டு இரவு 7.30 வரை திறந்திருந்தது.

அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News