இந்தியா
கொரோனா படுக்கை

2-வது அலையுடன் ஒப்பிடுகையில் 3-வது அலையில் உயிர்ப்பலி குறைவு: மத்திய அரசு

Published On 2022-01-21 03:16 GMT   |   Update On 2022-01-21 03:16 GMT
நாட்டில் 2-வது அலையுடன் ஒப்பிடுகையில், 3-வது அலையில் கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலிகள் அதிரிக்கவில்லை. பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டதால் கடுமையான நோய் பாதிப்பும் ஏற்படவில்லை.
புதுடெல்லி

நாடு கொரோனா 3-வது அலைக்கு எதிராக தீவிரமாக போராடிக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் மத்திய அரசு சார்பில் சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* நாட்டில் வயது வந்தோரில் (18 வயதானோர்) 94 சதவீதத்தினர் கொரோனாவுக்கு எதிரான முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விட்டனர்.

* இந்தியாவில் 72 சதவீதத்தினர் கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

* 15 முதல் 18 வயது வரையிலானோரில் 52 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு விட்டனர்.

* 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுகின்றனர்.

* நாட்டின் 515 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கிறது.

* டெல்லியை பொறுத்தமட்டில், 2-வது அலையுடன் ஒப்பிடுகையில் 3-வது அலையில் ஆஸ்பத்திரி படுக்கைகளில் தங்கி சிகிச்சை பெறுவது, ஆஸ்பத்திரிகளில் சேருவது கணிசமாக குறைந்துள்ளது.

* 11 முதல் 18 வயதானவர்களில் மேல் சுவாசக்குழாய் தொற்று பொதுவான அறிகுறியாக உள்ளது. அதே நேரத்தில் வயது வந்தோரில் 99 சதவீதத்தினருக்கு காய்ச்சல், இருமல், தொண்டை எரிச்சல் பொதுவான அறிகுறிகளாக உள்ளன.

* நாட்டில் 2-வது அலையுடன் ஒப்பிடுகையில், 3-வது அலையில் கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலிகள் அதிரிக்கவில்லை. பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டதால் கடுமையான நோய் பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News