தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஆப் ஸ்டோரில் இருந்து திடீரென சில செயலிகளை நீக்கிய ஆப்பிள்

Published On 2021-01-02 11:03 GMT   |   Update On 2021-01-02 11:03 GMT
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து சில செயலிகளை திடீரென நீக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஆப்பிள் நிறுவனம் தனது சீன ஆப் ஸ்டோரில் இருந்து 39 ஆயிரம் கேம் செயலிகளை நீக்கி இருக்கிறது. உரிமம் பெறாத காரணத்தால் இந்த செயலிகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சீனாவின் ஆப் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டெவலப்பர்கள் முறையான உரிமம் பெற ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே காலக்கெடு விதித்து இருந்தது. இந்நிலையில், உரிமம் பெறாத காரணத்தால் ஒரே நாளில் இத்தனை செயலிகள் நீக்கப்பட்டு இருக்கிறது.



ஆப்பிள் நிறுவன வரலாற்றில் ஒரே நாளில் அதிகளவு செயலிகள் நீக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும். ஆப் ஸ்டோரில் இருந்து மொத்தம் 46 ஆயிரம் செயலிகள் நீக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 39 ஆயிரம் செயலிகள் கேம்கள் ஆகும். 

நீக்கப்பட்ட செயலிகள் பட்டியலில் என்பிஏ2கே20 மற்றும் அசாசின்ஸ் கிரீட் ஐடென்டி என பல்வேறு பிரபல கேம்களும் இடம்பெற்று இருக்கின்றன. 

Tags:    

Similar News