செய்திகள்
ஆயுள் காப்பீடு

குடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு

Published On 2021-02-23 08:27 GMT   |   Update On 2021-02-23 08:27 GMT
தமிழகத்தில் குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, புதிய அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் தொடங்கப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே ஏற்கும் என கூறப்பட்டுள்ளது. 

இதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால், ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News