வழிபாடு
தென்காசி காசி விஸ்வநாத சாமி கோவில்

தென்காசி காசி விஸ்வநாத சாமி கோவிலில் தேரோட்டம் நாளை நடக்கிறது

Published On 2022-02-15 08:05 GMT   |   Update On 2022-02-15 08:05 GMT
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் நாளை (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது.
தென்காசி காசி விஸ்வநாத சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப்பெருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இரவில் சுவாமி-அம்பாள் வீதி எழுந்தருளல் நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 5-40 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது.

முதலில் சுவாமி தேரும் பின்னர் அம்பாள் தேரும் வடம்பிடித்து இழுக்கப்படுகின்றன. தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி மீண்டும் நிலையத்திற்கு வந்து சேரும். தேரோட்டத்திற்காக இரண்டு தேர்களும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News