செய்திகள்
கோப்புப்படம்

மராட்டியத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி

Published On 2020-10-18 03:34 GMT   |   Update On 2020-10-18 03:34 GMT
வரும் 25-ந் தேதி முதல் மராட்டியத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனுமதி வழங்கி உள்ளார்.
மும்பை:

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. எனவே மாநில அரசு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக மாநிலத்தில் தசரா (25-ந் தேதி) முதல் ஜிம் மற்றும் உடற்பயிற்சி சம்மந்தப்பட்ட பிற மையங்களை திறக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனுமதி அளித்து உள்ளார்.

எனினும் கூட்டமாக பயிற்சியில் ஈடுபடும் சும்பா, யோகா உள்ளிட்ட பயிற்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து முதல்-மந்திரி கூறியதாவது:-

ஜிம் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் பொது மக்களின் நலன் சார்ந்தது. எனவே தொற்று பரவாமல் தடுக்க அதிக அக்கறை எடுத்து கொள்ளப்பட வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஜிம் வளாகத்தை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் பயன்படுத்துவது கட்டாயம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News