செய்திகள்
மல்லிகை பூ

தஞ்சையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

Published On 2021-10-13 10:54 GMT   |   Update On 2021-10-13 10:54 GMT
பூக்களின் விலையில் அவ்வப்போது ஏற்றம் இறக்கம் இருக்கும். குறிப்பாக பண்டிகை, முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
தஞ்சாவூர்:

தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

பொதுமக்கள் ஏராளமானோர் சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்வர். இதேபோல் வியாபாரிகளும் விற்பனைக்காக பூக்கள் வாங்கி செல்வர். பூக்களின் விலையில் அவ்வப்போது ஏற்றம் இறக்கம் இருக்கும். குறிப்பாக பண்டிகை, முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் நாளை ஆயுதப்பூஜை, சரஸ்வதி பூஜை, நாளை மறுநாள் விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் வருகிறது. இதனால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இன்று பூச்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது நேற்று கனகாம்பரம் கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்டது. இன்று கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.200-க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.400-க்கு விற்பனையாகிறது. இதேபோல் முல்லை கிலோ ரூ.600, அரளி ரூ.400-க்கு விற்பனையானது. இந்த பூக்களும் நேற்றைய விட விலை அதிகமாகும்.

மேற்கூறிய பூக்களின் விலை மதியம் 1 மணி நிலவரப்படி ஆகும். மாலையில் பூக்களின் விலை இதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News