செய்திகள்
கோப்பு படம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Published On 2019-10-10 12:44 GMT   |   Update On 2019-10-10 12:44 GMT
வேலூர் திருவலத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

வேலூர் திருவலத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளனர்.

இதுபற்றி விவசாயிகள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிடுவதற்கான அனைத்துப் பொருள்களும் கொண்டு வந்திருந்தனர்.

விவசாயிகள் தரையில் அமர்ந்து நிலுவை தொகையை வழங்க கோரி கோ‌ஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் கிரேஸ்லால் ரிண்டிகிபச்சாவு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.32 கோடி கரும்பு நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. இதனை கேட்டு பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம் .ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
Tags:    

Similar News